News August 4, 2024
ஆடி அமாவாசை..இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..

ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால், பாவங்கள் நீங்கி அவர்களது ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது ஐதீகம். பிடித்தவருக்கு தர்ப்பணம் கொடுக்கலாம், இதற்கு எந்த தடையும் இல்லை. இதில், பெண்களும் தங்களுடைய தந்தைக்கு, தாராளமாக தர்ப்பணம் கொடுக்கலாம், திருமணம் முடிந்தால் கொடுக்கக்கூடாது என்பார்கள், அப்படி எதுவும் கிடையாது. கணவருடைய ஆயுட்காலம் எதுவும் குறையாது.
Similar News
News January 13, 2026
Night முழுக்க சார்ஜ் போடுறீங்களா? உஷார்!

காலையில் எழுந்ததும் 100% சார்ஜ் இருக்கணும் என எண்ணி, இரவு முழுவதும் போனை சார்ஜ் போடுகிறோம். அப்படி செய்வதால் பேட்டரியின் செயல்திறன் குறையுமாம். தற்போது, போன்களில் இருக்கும் லித்தியம்-அயன் பேட்டரி நவீனரகம் என்றாலும், அதன் செயல்திறனுக்கும் ஓர் எல்லை உண்டு. நீண்ட நேரம் போன் சார்ஜில் இருந்தால், செயல்திறன் பாதிப்பதோடு, சமயங்களில் பேட்டரி சூடாகி, வெடிப்பதற்கான சாத்தியங்களும் உள்ளன. SHARE.
News January 13, 2026
அமைச்சர் துரைமுருகனுக்கு ‘அண்ணா விருது’

2025-ம் ஆண்டுக்கான பேரறிஞர் ‘அண்ணா விருது’ அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். 1965-ம் ஆண்டு நடைபெற்ற மொழிப் போராட்டத்தில் பங்கெடுத்த துரைமுருகன், இலக்கியம், அரசியல் என எப்பொருளிலும் மணிக்கணக்கில் உரையாற்றும் ஆற்றல் பெற்றவர்; அவை முன்னவராக இருந்து சட்டப்பேரவையின் கண்ணியத்தை காக்கும் அவருக்கு அண்ணா விருது வழங்கப்படுவதாக CM தெரிவித்துள்ளார்.
News January 13, 2026
இடியுடன் கூடிய மழை வெளுக்கும்

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று பிற்பகல் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதன்படி, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூரில் இடியுடன் மழையும், அரியலூர், திண்டுக்கல், மதுரை, மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, திருச்சியில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


