News October 13, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 487 ▶குறள்: பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். ▶பொருள்: பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்.

Similar News

News December 14, 2025

ஆதிதிராவிடர் விடுதிகளுக்கு நிதியை விடுக்க வேண்டும்: EPS

image

மாணவர்களுக்கான உணவு படியையும், தனக்கான பணி மாறுதலும் கிடைக்காததால் விரக்தியில் மயிலாடுதுறை ஆதிதிராவிடர் விடுதி காப்பாளர் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் விடுதிக் காப்பாளர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசுக்கு EPS வலியுறுத்தியுள்ளார். மேலும் விடுதிகளுக்கு நிதியை விடுவிக்காததை கண்டிப்பதாகவும், இனியாவது நிதியை சரியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 14, 2025

சுப்மன் கில் டி20-க்கு கண்டிப்பாக தேவை: ஏபிடி

image

டி20-ல் தொடர்ந்து சொதப்பி வரும் சுப்மன் கில்லை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் ஒன்று இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடாததால் கில்லை நீக்குவது சரியானதாக இருக்காது என ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். அதிரடி வீரர்கள் நிறைந்த இந்திய அணியில் கில் போன்றவர் நிச்சயம் தேவை என்றும், முக்கியமான போட்டியில் அவர் ரன்களை குவிப்பார் என்றும் ஏபிடி கூறியுள்ளார்.

News December 14, 2025

வரலாற்றில் இன்று

image

*1812 – ரஷ்யா மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
*1799 – அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் மறைந்த நாள்.
*1959 – தமிழறிஞர் சோமசுந்தர பாரதியார் மறைந்தநாள்.
*1965 – இயக்குநர் வசந்த் பிறந்த தினம்.
*1984 – நடிகர் ராணா டகுபதி பிறந்தநாள்.

error: Content is protected !!