News March 30, 2025
தேர்தலுக்குப் பின் அதிமுகவுடன் தவெக கூட்டணி?

2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விஜய் முதலில் முடிவு செய்திருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையை கேட்டு தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க முடிவு செய்துள்ளார். தவெக குறைந்தது 25-50 இடங்களில் வெல்லக்கூடும் என தேர்தல் ஆலோசகர்கள் கூறியுள்ளதால், தேர்தலுக்குப் பிறகு அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பது, துணை முதல்வர் பதவியை பெறுவது என திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News July 11, 2025
தலையில் அதிக எண்ணெய் வைத்தாலும் ஆபத்து..!

தினமும் தலைமுடியில் அதிக எண்ணெய் தேய்த்தால் அது முடியின்கால்களை அடைத்துவிடுமாம். இதனால் தலைமுடி நன்றாக வளர்வதில் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். அதைப்போன்று அதிக எண்ணெய் இருக்கும்போது தூசியும், அழுக்கும் தலையில் சேருவதால் அரிப்பு, பொடுகு அதிகரிக்குமாம். ஆகையால் சிறிதளவு தேங்காய் எண்ணெயை தலை முழுவதும் படும்படி நன்றாக மசாஜ் செய்து, எண்ணெய் பிசுக்கு போகும் படி கழுவினாலே போதுமானதாம்.
News July 11, 2025
நாங்கள் 11, திமுக பூஜ்ஜியம்: இபிஎஸ்

அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது, ஆனால் திமுக ஆட்சியில் ஒரு மருத்துவ கல்லூரியாவது கொண்டு வந்தீர்களா என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தான் அரசுப்பள்ளியில் படித்து வந்ததால், மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேரும் வகையில் 7.5% உள் இடஒதுக்கீடு கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.
News July 11, 2025
மகாத்மா காந்திஜியின் பொன்மொழிகள்

*கோழையாக இருப்பதை விட போரில் கொல்வதும் கொல்லப்படுவதும் சிறந்தது. *நீங்கள் என்ன சிந்திக்கிறீர்களோ, சொல்கிறீர்களோ, செய்கிறீர்களோ அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. *ஒரு மனிதரின் குறிக்கோளில் எந்த கணத்தில் சந்தேகம் ஏற்பட்டுவிடுகிறதோ அந்த கணமே எல்லாமே கறைபட்டுவிடும். * அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும். அன்பு எப்போதும் பாதிப்படையாது,வன்மம் கொள்ளாது,பழிவாங்காது.