News August 21, 2024

கோலிக்கு எதிராக பந்து வீச விரும்பும் வீராங்கனை

image

நியூசிலாந்தைச் சேர்ந்த இளம் வீராங்கனை சாரா ஜெட்லி, விராட் கோலிக்கு எதிராக பந்து வீச விரும்புவதாக தெரிவித்துள்ளார். மகளிர் கிரிக்கெட்டில் பந்து வீசுவது கடினம் எனவும், விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், கோலிக்கு எதிராக பந்து வீசுவது மட்டுமில்லாமல், அவருடன் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதே தனது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 19, 2026

காஞ்சிபுரம்: தோழி கண் முன்னே துடிதுடித்து பலி!

image

சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார்(21), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், படூரைச் சேர்ந்த திவ்யா(25) என்பவருடன் நேற்று முன் தினம் போரூரில் உள்ள நண்பர் வீட்டிற்கு சென்று விட்டு, குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், தரப்பாக்கம் அருகே பைக் தடுமாறியதில் விபத்திற்குள்ளானது. இதில், படுகாயமடைந்த பிரவீன் குமார் தனது தோழி கண் முன்னரே உயிரிழந்தார்.

News January 19, 2026

உலக சந்தையில் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்!

image

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $83 உயர்ந்து $4,673-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ்-க்கு $5 உயர்ந்து $93.75 ஆக உள்ளது. இதனால், இன்று(ஜன.19) இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயரும். ஈரான், வெனிசுலா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் சர்வதேச பிரச்னைகளே தங்கம் உயர்வுக்கு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

News January 19, 2026

இனி ஜடேஜா வேண்டாம்..

image

NZ-க்கு எதிரான ODI தொடரில் ஜடேஜா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 3 போட்டிகளையும் சேர்த்து வெறும் 43 ரன்களை மட்டுமே அடித்த அவர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இதனால், கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள அவரை ODI அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என பலரும் கமெண்ட் செய்கின்றனர். மேலும், அவருக்கு பதிலாக அக்சர் படேலுக்கு வாய்ப்பளிக்கலாம் எனவும் சிலர் குறிப்பிடுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

error: Content is protected !!