News May 13, 2024
₹1500 கோடிக்கு விலை போகும் தலைமுடி

2023ஆம் ஆண்டில் ₹1500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியர்களின் தலைமுடி ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டு இது வெறும் ₹290 கோடியாக இருந்தது. இந்த வகை முடிகள் செயற்கை விக் செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் செயற்கை முடிக்கான தேவை அதிகரித்திருப்பதால் முடிகளின் தேவை அதிகரித்துள்ளது. அதனை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா திகழ்கிறது.
Similar News
News December 17, 2025
சுப்மன் கில் OUT.. பிளேயிங் 11 மாற்றமா?

SA-வுக்கு எதிரான 4-வது டி20-ல், கில்லுக்கு பதிலாக சாம்சனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என கைஃப், பத்ரிநாத் உள்ளிட்டோர் கூறியுள்ளனர். கடந்த 18 டி-20 போட்டிகளில், கில் ஒன்றில் கூட 50 அடிக்கவில்லை. நடப்பு தொடரிலும் 4(2), 0(1), 28(28) என 32 ரன்களே எடுத்துள்ளார். டி-20 WC-க்கு 2 மாதங்களே உள்ளதால், கில்லுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. பிளேயிங் 11-ல் யார் இடம்பெறணும்?
News December 17, 2025
பனீர் சாப்பிட பிடிக்குமா.. கொஞ்சம் கவனியுங்க!

இந்தியாவில் 83% போலியான பனீரே விற்கப்படுகின்றன என்ற ஷாக்கிங் தகவலை FSSAI தெரிவித்துள்ளது. இது மைதா, ArrowRoot powder, Urea ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படுகிறதாம். பனீரின் மீது Iodine Tincture-ஐ விடும் போது, அது கருப்பாக மாறினால், அது போலியானது. அதுவே ஒரிஜினலாக இருந்தால், அது பனீர் மீது படிமமாக தேங்கி நின்றுவிடும். குடல், கிட்னி போன்றவற்றுக்கு இந்த போலி பனீர் பிரச்னையை உண்டாக்குமாம்.
News December 17, 2025
2026-ல் எந்தெந்த தொகுதிகள்.. பாஜக முக்கிய முடிவு

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம் இன்று காலை 11 மணியளவில் கூடுகிறது. இக்கூட்டத்தில், பாஜக வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகள், கூட்டணி கட்சியினருடன் இணைந்து செயல்படுவது, வார்டு வாரியாக மக்கள் சந்திப்பை நடத்துவது உள்ளிட்டவை குறித்து முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், நயினார், அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.


