News August 6, 2024
ஸ்பெயின் பேட்ஜை கையில் ஏந்திய சீன வீராங்கனை

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஹி பிங் ஜியாவ் வெள்ளிப் பதக்கம் வென்றார். பதக்கம் பெறும் மேடையில், ஸ்பெயின் அணியினரின் பேட்ஜை அவர் கையில் வைத்திருந்தது கவனத்தை ஈர்த்தது. இது தொடர்பாக பேசிய அவர், அரையிறுதியில் ஜியாவுடன் மோதிய ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் காயம் காரணமாக பாதியிலேயே விலகினார். மரினை கௌரவிக்கும் வகையில், இதனை தாம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
Similar News
News January 19, 2026
‘Live In’ உறவு பாதுகாப்பானது அல்ல: மதுரை HC

பெருகும் ‘Live In’ உறவு முறையில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக மதுரை HC நீதிபதி ஸ்ரீமதி எச்சரித்துள்ளார். இதுகுறித்த வழக்கின் விசாரணையில், திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய பிரபாகரன் என்பவரை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். திருமண உறவு வழங்கும் எந்த பாதுகாப்பையும் ‘Live in’ தருவதில்லை என்றும், இதை பெண்கள் உணரும்போது யதார்த்தம் நெருப்பை போல சுடத் தொடங்குகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
News January 19, 2026
சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜாவுக்கு கௌரவம்

அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் மிக முக்கிய விருதாக கருதப்படும் ‘பத்மபாணி’ இளையராஜாவுக்கு வழங்கப்படுகிறது. ஜன. 28 முதல் பிப். 4-ம் தேதி வரை மும்பை சத்ரபதி சம்பாஜிநகரில் இவ்விழா நடைபெறுகிறது. விழாவின் முதல்நாளன்று தேசிய, சர்வதேச கலைஞர்கள் முன்னிலையில் இளையராஜா கௌரவிக்கப்படுவார். இதில் பத்மபாணி நினைவுப் பரிசு, கௌரவப் பத்திரம் மற்றும் ₹2 லட்சம் ரொக்கம் அவருக்கு வழங்கப்படும்.
News January 19, 2026
BREAKING: தொடர்ந்து 4 நாள்கள் இயங்காது

வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 27-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு வங்கி கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. ஜன.24 (4-வது சனி), ஜன.25 (ஞாயிற்றுக்கிழமை), ஜன.26 (குடியரசு தினம்) ஆகிய தேதிகளில் ஏற்கெனவே தொடர் விடுமுறை வருகிறது. 27-ம் தேதி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டதால் வங்கிகள் 4 நாள்கள் இயங்காது. எனவே, வங்கி தொடர்பான பணிகளை விரைவாக முடித்துவிடுங்கள்.


