News June 19, 2024
67 வயது தாத்தாவாக மாறிய 24 வயது இளைஞர்!

டெல்லி விமான நிலையத்தில் 67 வயது முதியவரை போல வேடமணிந்து, கனடா செல்ல முயன்ற 24 வயது இளைஞரை சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் கைது செய்தனர். இளமையான தோற்றம், தோல் அமைப்பு, குரல் ஆகியவற்றால் சந்தேகம் அடைந்த காவலர்கள், அவரை தனியாக அழைத்து சோதனை செய்ததில், தாடி மற்றும் மீசைக்கு வெண்மை நிற டை அடித்திருந்தது அம்பலமானது. விசாரணையில் போலி பாஸ்போர்ட் மூலம் கனடா செல்ல முயன்றது தெரியவந்துள்ளது.
Similar News
News January 21, 2026
கள்ளக்குறிச்சி: ஒரு ‘Hi’ போதும், வங்கி விவரங்கள் Whatsapp-இல்!

கள்ளக்குறிச்சி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242, 4) IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
News January 21, 2026
அரசுப் பள்ளி மாணவி கர்ப்பம்.. வசமாக சிக்கினார்

தமிழகத்தில் பள்ளி மாணவிகள் கர்ப்பமாகும் செய்திகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சேலம், பெத்தநாயக்கன்பாளையத்தில் 15 வயதுடைய அரசுப் பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞர் மணி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த மாணவியை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றபோது உண்மை தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News January 21, 2026
2000’s ஜாம்பவான்கள் ரீயூனியன்! (PHOTO)

2000-களின் காலகட்டத்தில் கிரிக்கெட் பார்க்க தொடங்கியவர்களுக்கு இந்த போட்டோவில் உள்ள ஜாம்பவான்களை பிடிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. சேவாக்கின் அதிரடி, யுவராஜின் Six 6’s, முகமது கைஃபின் தரமான கேட்ச்கள், நெஹ்ரா மற்றும் அகர்கரின் ஸ்விங் பவுலிங் என ஒவ்வொன்றும் உங்களுடைய நினைவில் நிழலாடும். சமீபத்தில் இவர்கள் எடுத்துக்கொண்ட செல்ஃபி தான் SM-ல் தீயாக பரவுகிறது. இதில் உங்களுக்கு பிடித்தமான வீரர் யார்?


