News November 11, 2024

Finance Tips: சிபில் ஸ்கோர் ஏன் முக்கியம்?

image

ஒருவரின் கடன் செலுத்தும் திறனை குறிக்கும் எண் (300-900) CIBIL ஸ்கோர் ஆகும். இது உயர்வாக இருந்தால், குறைந்த வட்டி விகிதத்தில் எளிதாக கடன் பெற முடியும். அதிக கிரெடிட் கார்டு லிமிட்டும் கிடைக்கும். வீடு, கார் வாங்குதல், கல்வி போன்ற முக்கிய தேவைகளுக்கு, வங்கிகளின் பர்சனல் லோன் உங்களுக்கு தேவைப்படலாம். அப்போது ஸ்கோர் அதிகமாக இருந்தால் எளிதாக கடன் கிடைக்கும். உங்கள் சிபில் ஸ்கோரை செக் பண்ணீங்களா?

Similar News

News December 7, 2025

பணம் கொடுத்தார் ஸ்டாலின்.. அனைவரும் இத செய்யுங்க

image

கொடிநாளையொட்டி சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் CM ஸ்டாலின் நிதியளித்தார். இதுகுறித்து அவரது X பக்கத்தில், மக்கள் பாதுகாப்பாக வாழ உயிரைத் துச்சமாக எண்ணி காவல் காக்கும் படை வீரர்களின் பணி ஈடு இணையற்றது. தியாகத் தீரர்களின் மறுவாழ்வுக்கும், அவர்களின் குடும்ப நலுனுக்கும் அனைவரும் கொடிநாள் நிதியளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக PM மோடியும் நிதியளித்துள்ளார்.

News December 7, 2025

சரித்திரம் படைத்தார் அபிஷேக் சர்மா!

image

ஒரே ஆண்டில் T20-ல் 100 சிக்ஸர்களை கடந்த ஒரே இந்தியர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். சையத் முஷ்டாக் அலி தொடரில், சர்வீசஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 3 சிக்ஸர்களை விளாசி இச்சாதனை படைத்துள்ளார். 2025-ல் T20 கிரிக்கெட்டில், தற்போது வரை அவர் 101 சிக்சர்களை அடித்துள்ளார். இப்போட்டியில் முதலில் பஞ்சாப் 233/6 ரன்களை குவிக்க, சர்வீசஸ் அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

News December 7, 2025

கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார் செங்கோட்டையன்

image

தவெக கூட்டணியில் TTV, OPS இணைவார்கள் என கூறப்படும் நிலையில், அதுகுறித்து செங்கோட்டையன் சூசகமாக பதிலளித்துள்ளார். விஜய்க்கு வழிகாட்டியாக இருந்து வெற்றிக்கு உதவுவேன் என கூறிய KAS, இதற்கு அனைவரும் ஒன்றுதிரண்டு ஆதரவளிக்க வேண்டும் என TTV, OPS-க்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த பதிலால் TTV, OPS உடன் அவர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது மறைமுகமாக உறுதியாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!