News July 24, 2024
விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

3 ஆண்டு எல்.எல்.பி, எல்.எல்.பி (ஹானர்ஸ்) படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜூலை 31ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். இன்று மாலை 5.45 மணியுடன் விண்ணப்பிக்கும் நேரம் முடிவடைந்த நிலையில், ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை மானவர்கள் பயன்படுத்திக் கொண்டு www.tndalu.ac.inஇல் விரைவாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 12, 2026
அக்சரிடம் மன்னிப்பு கேட்டேன்: சூர்யகுமார்

T20 WC சூப்பர் 8 சுற்றில் SA-க்கு எதிரான போட்டியில் அக்சர் படேலை அணியில் சேர்க்காததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டதாக சூர்யகுமார் தெரிவித்தார். அதற்காக அக்சர் தன்னிடம் கோபத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறினார். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக அக்சர் விளையாடாத நிலையில், SA-க்கு எதிரான போட்டியில் அவருக்கு பதிலாக வாஷிங்டன் விளையாடினார். அதில் இந்தியா தோல்வி அடைந்தது.
News March 12, 2026
மோடி ஆட்சியில் 1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை:ரகுபதி

விவசாயிகளுக்கு எதிராக திமுக செயல்படுவதாக PM மோடி வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். 3 வேளாண் சட்டங்கள் உள்பட விவசாயிகளுக்கு எதிராக அனைத்தையும் செய்துவிட்டு அவர்களை பற்றி பேச மோடிக்கு எந்த உரிமையும் இல்லை என அவர் சாடியுள்ளார். மோடி ஆட்சியில் 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், தேர்தல் வந்தாலே TN மீது PM-க்கு பாசம் வந்துவிடும் எனவும் விமர்சித்துள்ளார்.
News March 12, 2026
3 சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. அதிரடி தீர்ப்பு

நெல்லை, மேலப்பாளையத்தில் 2023-ம் ஆண்டில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் அந்த வழக்கை விசாரித்த நெல்லை போக்சோ கோர்ட், 40 வயதான குற்றவாளி ஆனந்த சேகருக்கு தூக்கு தண்டனை விதித்து இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன் 3 சிறுமிகளுக்கும் தலா ₹7 லட்சத்தை இழப்பீடாக வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.


