News July 20, 2024
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

ராமநாதபுரம் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 23.7.24 காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ராமநாதபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ராமநாதபுரம் கோட்ட மின் நுகர்வோர் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என ராமநாதபுரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சகர்பான் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 12, 2025
ராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி மேலாண்மை குழு கூட்டம்!

ராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நேற்று முத்துப்பேட்டை பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயந்திமலர் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் நாகநாதன் வரவேற்றார். முதுகலை ஆசிரியர் தமிழரசி, ஆசிரியர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவ மாணவியர் கல்வி செயல்பாடு, விடுதி வசதி, சுகாதார வசதி குறித்து விவாதிக்கப்பட்டது.
News August 11, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் இல்லை

காவேரி கூட்டுக்குடி நீர் திட்டத்தில் மாதந்திர மின் பராமரிப்பு பணிகள், கூட்டுக்குடி நீர் திட்ட பராமரிப்பு பணிகள் மற்றும் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையால் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 12, 13 ஆகிய 2 நாட்கள் காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News August 11, 2025
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராமநாதபுரம் எம்பி கைது

தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர். இதில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியும் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எம்பி நவாஸ்கனி, பாஜகவின் அரசு ஜனநாயக படுகொலையை, வாக்கு திருட்டை அம்பலப்படுத்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.