News July 6, 2024
தொழிலாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கும் கிருஷ்ணசாமி

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் இருந்து தொழிலாளர்களை வெளியேறக்கூறும் சம்பவத்தைக் கண்டித்து இன்று புதிய தமிழகம் கட்சி சார்பில் நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தேயிலைத் தோட்டங்களில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது எனக் கூறிய புதக தலைவர் கிருஷ்ணசாமி, தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு, மறுவாழ்வு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுவது மனிதநேயமற்றது என விமர்சித்துள்ளார்.
Similar News
News December 2, 2025
99% பேருக்கு SIR படிவங்கள் கொடுத்துவிட்டோம்: ECI

தமிழகத்தில் நவ.4 முதல் SIR பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 99.20% வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில், 6.35 கோடிக்கும் மேற்பட்டோருக்கு SIR படிவம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளது. இதில், 91.49% படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ECI அறிவித்துள்ளது.
News December 2, 2025
மக்கள் நாயகன் காலமானார்

தேசத்திற்காக எண்ணற்ற போர்களில் களம் கண்ட Lt Col ஜம்வால் (100) வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். பிரிட்டிஷ் இந்திய ராணுவம் & இந்திய ராணுவத்தில் பணியாற்றிய ஒரு சில வீரர்களில் இவரும் ஒருவர். 1947-48 இந்தோ-பாக் போரின் போது, C படைப்பிரிவின் குதிரைப்படை தளபதியாக செயல்பட்ட ஜம்வால், கடினமான zojila கணவாயை கடந்து எதிரிகளை தாக்கினார். நாட்டை காத்த ரியல் ஹீரோ மறைவுக்கு பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.
News December 2, 2025
IPL 2026: அடுத்தடுத்து விலகும் முன்னணி நட்சத்திரங்கள்!

மேக்ஸ்வெல்லை PBKS அணி தக்கவைக்காத நிலையில், அவர் தனது பெயரை IPL மினி ஏலத்திற்கு பதிவு செய்யவில்லை. இதனால் அவர் 2026 தொடரில் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. அதே போல, KKR வீரர் <<18444409>>மொயின் அலி<<>>யும், PSL தொடரில் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளார். ஆகையால், அவரும் IPL-ல் விளையாட மாட்டார். முன்னதாக, KKR-ன் ரஸல் ஓய்வை அறிவித்த நிலையில், DC-ன் டூ பிளெஸ்ஸிஸ் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.


