News June 24, 2024
தங்கம் விலை உயர்வு

தங்கத்தின் விலை நேற்று முன்தினம் குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹40 உயர்ந்து ₹53,600க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ₹5 உயர்ந்து ₹6,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசுகள் குறைந்து கிராம் ₹96.20க்கும், கிலோ ₹96,200க்கும் விற்கப்படுகிறது.
Similar News
News November 17, 2025
திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி ஏழுமலையானை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழிபட ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை(நவ.18) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. அதேபோல் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ஆகியவற்றுக்கான தரிசன டிக்கெட்டுகள் 21-ம் தேதி வெளியிடப்படுகிறது. தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட டிக்கெட்டுகள் ஆகியவற்றை திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதளமான <
News November 17, 2025
BREAKING: பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் இன்று(நவ.17) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்கும் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்த அறிவிப்பு சற்று நேரத்தில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 17, 2025
தமிழகத்தில் 2026-ல் கூட்டணி ஆட்சி அமையும்: பிரேமலதா

தமிழகத்தில் 2026 தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே மகத்தான வெற்றி பெறும் என பிரேமலதா விஜயகாந்த தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026-ல் நிச்சயம் கூட்டணி ஆட்சி அமையும் என்றும், விஜயகாந்தின் கனவு, லட்சியம் நிறைவேறும் எனவும் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் நிரந்தர முதல்வர் என யாரும் கிடையாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


