News June 12, 2024
பாஜகவால் தோற்றோம்: கூட்டணிக்குள் சலசலப்பு

400க்கும் அதிகமான இடங்களில் வெல்வோம் என பாஜகவினர் பிரச்சாரம் செய்ததால்தான், தோல்வியை சந்தித்ததாக, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். பாஜக 400 இடங்களில் வென்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவார்கள் எனவும், இடஒதுக்கீட்டை பறிப்பார்கள் என்றும், எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்ததன் காரணமாகவே, மகாராஷ்டிராவில் NDA கூட்டணி குறைவான இடங்களில் வென்றதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News November 12, 2025
டிகிரி மட்டும் போதும்; வங்கியில் வேலை.!

பேங்க் ஆப் பரோடாவில் Apprentice பணிக்கு 153 காலிப்பணியிடங்கள் உள்ளன. தகுதி: ஏதாவது ஒரு டிகிரி. வயது வரம்பு: 20-28 வயது வரை. ஊதியம்: மாதம் ₹15,000 வரை Stipend. தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உள்ளூர் மொழி தேர்வு. விண்ணப்ப கடைசி நாள்: 1 பிப்ரவரி 2026. விண்ணப்பிக்கும் முறை: Bank of Baroda அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக மட்டுமே. வேலை தேடுவோருக்கு SHARE THIS.
News November 12, 2025
தவெகவில் இருந்து தாவும் நிர்வாகிகள்

கட்சி ஆரம்பித்த புதிதில் நாதகவின் தம்பிகளை நாசுக்காக தன் வசம் இழுத்தது தவெக. ஆனால் கரூர் சம்பவத்துக்கு பிறகு களமே தலைகீழாக மாறியிருப்பதாக கூறப்படுகிறது. அதிருப்தியில் இருக்கும் தவெகவினரை வலைவீசித் தேடி நாதகவுக்கு கூட்டிவரும் ஸ்பெஷல் அசைன்மெண்ட்டில் தம்பிகள் இறங்கியிருக்கிறார்களாம். இதனால்தான் ராணிப்பேட்டை வழக்கறிஞர் அணி இணை ஒருங்கிணைப்பாளரான அஜய், ஆதரவாளர்களோடு நாதகவுக்கு ஜம்ப் ஆனார் என்கின்றனர்.
News November 12, 2025
தமிழ் நடிகர் மரணம்.. நடிகை கண்ணீருடன் இரங்கல்

மறைந்த நடிகர் அபிநய் குறித்து நடிகை விஜி உருக்கமான பதிவை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். ‘சென்னை 28’ படத்துக்கு பிறகு ஒரு பெரிய விளம்பரப் படத்தில் அபிநய் உடன் நடித்தேன். அப்போது ஒருநாள் அவரின் மனதில் இருந்த வலியை கொட்டித் தீர்த்தார். தற்போது அவர் காலமானார் என்ற செய்தியை கேட்டதும் அழுதேன். அவரின் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. ஒருவழியாக அமைதியை அடைந்துவிட்டார் என்று பதிவிட்டுள்ளார்.


