News June 12, 2024
தீ விபத்தில் 40 இந்தியர்கள் பலி

குவைத் நாட்டில் குடியிருப்புக் கட்டடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 40 இந்தியர்கள் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் தமிழர்கள் உள்பட இந்தியாவைச் சேர்ந்த பலர் தங்கியுள்ளனர். இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 53 பேர் பலியானதாகவும், அதில் 2 தமிழர்கள் உள்பட 40 பேர் இந்தியர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது
Similar News
News November 12, 2025
இதுதான் ‘ஜனநாயகன்’ படத்தின் முழு ஆல்பம்!

தளபதி கச்சேரி பாடல் பட்டி தொட்டி எங்கும் பெரும் ஹிட்டடித்துள்ள நிலையில், தற்போது ‘ஜனநாயகன்’ படத்தின் முழு ஆல்பம் குறித்த தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அனிருத் இசையில் படத்தில் 5 பாடல்கள் இருக்கிறதாம் ★தளபதி, பூஜா ஹெக்டே நடிக்கும் ‘டியூட்’ டான்ஸ் சாங் ★எம்.ஜி.ஆரின் நான் ஆணையிட்டால் பாட்டின் Remix ★தளபதி மாஸ் தீம் சாங் ★எமோஷனலான சாங் (விஜய், மமிதா பைஜூ) ★தளபதி கச்சேரி
News November 12, 2025
ஜடேஜா, சாம் கரன் டிரேடில் உருவான சிக்கல்

ஜடேஜா, சாம் கரனை கொடுத்துவிட்டு RR அணியிடமிருந்து சஞ்சு சாம்சனை CSK வாங்கும் ஒப்பந்தம் உறுதியாகிவிட்டது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராததற்கு காரணம் RR-ல் இருக்கும் வெளிநாட்டு வீரர்கள்தான். அந்த அணியில் ஏற்கெனவே 8 வெளிநாட்டு வீரர்கள் உள்ளதால், அதில் சாம் கரனை இணைப்பது சிக்கலாக உள்ளது. இதனால் RR ஹசரங்கா அல்லது தீக்ஷனாவை விடுவிக்க பரிசீலித்து வருகிறது.
News November 12, 2025
ஸ்டாலின் தொகுதியிலேயே போலி வாக்காளர்கள்: நிர்மலா

மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 4,379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். SIR-க்கு எதிராக திமுக போராட்டம் நடத்துவது ஆச்சரியம் அளிக்கிறது எனக் கூறிய அவர், SIR என்றால் என்ன என்றே தெரியாமல் உதயநிதி ‘ரிவிஷன்’ என்பதை ‘ரெஸ்ட்ரிக்ஷன்’ என சொல்வதாக விமர்சித்தார். மேலும், தங்களின் ஆட்சியின் தோல்விகளை மறைக்க திமுக, இதுபோன்ற நிலைப்பட்டை எடுப்பதாக சாடினார்.


