News June 12, 2024
திமுக பெரும் நெருக்கடியைச் சந்திக்கலாம்?

2019 மக்களவைத் தேர்தலில், 33.5% வாக்கு வாங்கிய திமுக, தற்போது 27% மட்டுமே பெற்றுள்ளது. ஆளுங்கட்சி, கூட்டணி பலம், பிளவுபட்ட அதிமுக என பலமாக இருந்தபோதிலும் திமுகவின் வாக்கு குறைந்திருக்கிறது. மின்கட்டணம் & வரி உயர்வு உள்ளிட்டவை காரணமாக அரசு மீதான மக்களின் அதிருப்தி மனநிலை, சட்டமன்றத் தேர்தல் வரை நீடித்தால், திமுக பெரும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
Similar News
News November 12, 2025
ரஜினியை தொடர்ந்து கமலை இயக்குகிறாரா சுந்தர் சி?

‘அருணாச்சலம்’ படத்திற்கு பின்னர் மீண்டும் ரஜினி படத்தை இயக்குவேன் என எதிர்பார்க்கவே இல்லை என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இதுபோன்று மீண்டும் கமல்ஹாசனை இயக்குவதற்கான வாய்ப்பு அமையலாம் எனவும், அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால், அந்த படத்தையும் மிகச்சிறப்பாக இயக்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, கமல் நடிப்பில் ‘அன்பே சிவம்’ படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார்.
News November 12, 2025
National Roundup: PM தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

*ஜனாதிபதி முர்முவுக்கு போட்ஸ்வானா நாட்டில் பாரம்பரிய வரவேற்பு. *டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக PM மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம். *இந்தியாவின் புது அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமனம். *பதற்றங்களுக்கு மத்தியில் PAK எல்லையில் இந்திய ராணுவம் பயிற்சி. *மேகதாது அணையால் TN-க்கு பாதிப்பு இல்லை சித்தராமையா உறுதி. *டெல்லி குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ₹10 லட்சம் இழப்பீடு.
News November 12, 2025
விஜய்யால் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம்

தவெக உடன் கூட்டணி அமையாவிட்டால், பல அதிமுக தலைவர்கள் போட்டியிட தயங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் வசீகரம் + பெரிய கூட்டணி இல்லாமல், போட்டியிட ரெடியாக இல்லை என மாவட்ட, உள்ளூர் தலைவர்கள் EPS-க்கு தகவல் அனுப்ப தொடங்கியுள்ளார்களாம். தேர்தல் பிரசாரங்களுக்கு தொகையை செலவிடுவதிலும் சுணக்கம் காட்டி வருகிறார்களாம். விஜய்யின் இருப்பு பல தொகுதிகளின் வெற்றியை தீர்மானிக்கும் என்றும் கருதுகின்றனர்.


