News June 8, 2024
முடிவுக்கு வரும் ‘எதிர்நீச்சல்’ தொடர்

சின்னத்திரை தொடர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று ‘எதிர்நீச்சல்’. இத்தொடரில் நடித்துவந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பால் காலமானதால், இத்தொடரின் டிஆர்பி சரியத் தொடங்கியது. அதன்பின் மாரிமுத்துவுக்குப் பதிலாக வேல ராமமூர்த்தி நடித்துவந்த நிலையில், தற்போது இத்தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இத்தொடரின் க்ளைமேக்ஸ் காட்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்
Similar News
News December 7, 2025
வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு

டிட்வா புயலால் கடந்த வாரம் வெறிச்சோடி இருந்த சென்னை, கடலூர் மீன் சந்தைகள் இந்த வாரம் களைகட்டியுள்ளன. சென்னை காசிமேடு சந்தையில் மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டதால் விலை கிடுகிடுவென உயர்ந்தது. 1 கிலோ வஞ்சிரம் – ₹900 – ₹1,400, கொடுவா ₹700 – ₹800, பால் சுறா – ₹350 – ₹500, சங்கரா, இறால் – ₹400 – ₹500, பாறை, கடமா ₹600 – ₹800, நண்டு ₹500 – ₹600-க்கு விற்பனையாகிறது. உங்கள் ஊரில் விலை என்ன?
News December 7, 2025
தேர்தல் பணியை தீவிரப்படுத்திய ECI

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. சமீபத்தில் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், அவர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி வரும் வியாழக்கிழமை தொடங்கும் எனவும் தெரிகிறது.
News December 7, 2025
மதியத்தில் விஜய் பொதுக்கூட்டம்

ஈரோட்டில் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் டிச.16-ம் தேதி மதியம் 1 – மாலை 6 மணிக்குள் நடைபெறவிருப்பதாக கலெக்டரிடம் செங்கோட்டையன் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு, பவளத்தாம்பாளையத்தில் 75,000 பேர் வந்து, செல்லும் வகையில் 7 ஏக்கர் இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், ரோடு ஷோ இல்லாமல் பரப்புரை வாகனத்தில் விஜய் உரையாற்ற உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


