News May 28, 2024

3 புதிய வசதிகளை அறிமுகம் செய்தது RBI

image

PRAVAAH இணையதளம், RBI Retail Direct மொபைல் செயலி மற்றும் ஃபின்டெக் ரிபோசிட்டரி ஆகிய வசதிகளை RBI அறிமுகம் செய்துள்ளது. PRAVAAH தளத்தின் மூலம் தனிநபர் அல்லது நிறுவனங்கள் பல்வேறு ஒப்புதல்களுக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க முடியும். Retail Direct செயலி மூலம் முதலீட்டாளர்கள் அரசு கடன் பத்திரங்களில் நேரடியாக முதலீடு செய்யலாம். ஃபின்டெக் துறையின் பல்வேறு தகவல்களை ஃபின்டெக் தரவு தளத்தில் பெறலாம்.

Similar News

News September 18, 2025

GST 2.0: டிவிக்களின் விலை ₹70,000 வரை குறைகிறது

image

GST 2.0 எதிரொலியாக <<17745738>>கார், பைக் நிறுவனங்கள் <<>>வாகனங்களின் விலையை குறைத்த நிலையில், சோனி நிறுவனமும் பிரீமியம் டிவிக்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி, 85 இன்ச் டிவிக்களின் விலை ₹70,000, 75 இன்ச் டிவி – ₹51,000, 65 இன்ச் டிவி 40,000, 55 இன்ச் டிவி – ₹32,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை குறைப்பு வரும் 22-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 18, 2025

போலி பாகிஸ்தான் வீரர்களை திருப்பி அனுப்பிய ஜப்பான்

image

ஃபுட்பால் வீரர்கள் என்ற பெயரில் தங்கள் நாட்டிற்குள் நுழைய முயன்ற, 22 பாகிஸ்தானியர்களை ஜப்பான் திருப்பி அனுப்பியுள்ளது. வகாஸ் அலி என்பவர் போலியான ஃபுட்பால் கிளப் நடத்தி, அதன் மூலம் பலரிடம் பணம் வாங்கிக் கொண்டு, பாகிஸ்தானியர்களை ஜப்பானுக்கு அனுப்புவது தெரியவந்துள்ளது. இதை பாகிஸ்தான் விசாரணை அமைப்பும் உறுதி செய்துள்ளது. கடந்த 2024-லிலும், வாகாஸ் இதேபோல் 17 பேரை ஜப்பானுக்கு அனுப்பியுள்ளாராம்.

News September 18, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. ▶குறள் எண்: 462 ▶குறள்: தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல். ▶பொருள்: தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை.

error: Content is protected !!