News May 27, 2024

டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகிய ஹோல்டர்

image

டி20 உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் காயம் காரணமாக விலகியுள்ளார். இதன் காரணமாக உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஓபேத் மெக்காய் சேர்க்கப்பட்டுள்ளார். நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க தொடரிலும் ஓபேத் மெக்காய் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோவ்மன் பவெல் கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார்.

Similar News

News March 12, 2026

கள்ளக்குறிச்சி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

கள்ளக்குறிச்சி மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

அக்சரிடம் மன்னிப்பு கேட்டேன்: சூர்யகுமார்

image

T20 WC சூப்பர் 8 சுற்றில் SA-க்கு எதிரான போட்டியில் அக்சர் படேலை அணியில் சேர்க்காததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டதாக சூர்யகுமார் தெரிவித்தார். அதற்காக அக்சர் தன்னிடம் கோபத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறினார். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக அக்சர் விளையாடாத நிலையில், SA-க்கு எதிரான போட்டியில் அவருக்கு பதிலாக வாஷிங்டன் விளையாடினார். அதில் இந்தியா தோல்வி அடைந்தது.

News March 12, 2026

மோடி ஆட்சியில் 1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை:ரகுபதி

image

விவசாயிகளுக்கு எதிராக திமுக செயல்படுவதாக PM மோடி வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். 3 வேளாண் சட்டங்கள் உள்பட விவசாயிகளுக்கு எதிராக அனைத்தையும் செய்துவிட்டு அவர்களை பற்றி பேச மோடிக்கு எந்த உரிமையும் இல்லை என அவர் சாடியுள்ளார். மோடி ஆட்சியில் 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், தேர்தல் வந்தாலே TN மீது PM-க்கு பாசம் வந்துவிடும் எனவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!