News December 8, 2025
சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (07.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
சிவகங்கை: வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து!

இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கிராமத்தில் களையெடுக்கும் பணி முடித்துவிட்டு, ஒரு மினி வேனில் 20க்கும் மேற்பட்டோர் வந்தனர். பெருமானேந்தல் அருகே மினிவேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்ததில், குயவர்பாளையத்தை சேர்ந்த 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவகங்கை: இலவச தையல் மிஷின் – ஆட்சியர் அழைப்பு!

சிவகங்கை மாவட்டம், தகுதியுடைய முன்னாள் படைவீரர் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் ஆகியோர் இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு வருகின்ற 15.12.2025 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.