News November 30, 2025

தென்காசி – பம்பைக்கு இன்று முதல் சிறப்பு பஸ்

image

ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக தென்காசியில் இருந்து கேரள மாநிலம் பம்பை வரை சிறப்பு கேரள அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. இந்த பஸ் சேவை தென்காசியில் இருந்து தினமும் இரவு 7 மணிக்கு புறப்படும். இதுபோல் பம்பையில் இருந்து தென்காசிக்கு தினமும் காலை 9 மணிக்கு இந்த சிறப்பு பஸ் புறப்படும். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இந்த பஸ் வசதி பயன்படுத்திக் கொள்ளலாம்.

Similar News

News December 2, 2025

தென்காசி: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தென்காசி மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்க வழி இருக்கு. இந்த <>ஆதார்<<>> செயலியை பதிவிறக்கம் செய்து ஆதாரில் பெயர், முகவரி, மொபைல் எண் போன்றவற்றை மாற்றம் செய்து கொள்ளலாம். உங்க குடும்பத்தினரின் உள்ள ஆதார் மாற்றங்களை செய்து கொள்ளலாம். இந்த செயலி இருந்தா ஆதார் கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. SHARE பண்ணுங்க!

News December 2, 2025

தென்காசியில் மாணவர் போக்சோவில் கைது

image

ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவிக்கும், வி.கே. புரத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாகவும் ஏமாற்றி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அவர் கர்ப்பமானதுடன் குறை பிரசவத்தில் ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. புகாரின் பேரில் ஆலங்குளம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை போக்சோவில் கைது செய்தனர்.

News December 2, 2025

தென்காசி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

image

தென்காசி அருகே பாட்ட பத்து பாரதி தெருவை சேர்ந்தவர் பலவேசம் மனைவி மாரியம்மாள் நேற்று வடகரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்ற போது மாரியம்மாள் பைக்கில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார். தென்காசி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்குறித்து இலத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!