News November 29, 2025
தி.மலை: மன வேதனையால் பெண் தற்கொலை!

வந்தவாசி அருகே இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த கன்னிகா (35) என்பவர் உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 2, 2025
தி.மலை தீபத்திருவிழா: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தீபத் திருவிழாவையொட்டி இன்று முதல் டிச.5 காலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து தி.மலை வழியாக செல்லும் கனரக-இலகுரக வாகனங்கள் வந்த செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பதி, வேலூரில் இருந்து வரும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் ஆற்காடு, செய்யாறு வழியாக செல்லலாம். தி.மலை நகருக்கு உள்ளேயும், மாடவீதி, கிரிவலப் பாதையில் இருசக்கர வாகங்கள் செல்ல அனுமதி இல்லை.
News December 2, 2025
தி.மலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

திருவண்ணாமலையில் நாளை( டிசம்பர் 3) கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தி.மலை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடுகட்ட டிசம்பர் 13 ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News December 2, 2025
தி.மலையில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

சேத்துப்பட்டு மின் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், சேத்துப்பட்டு, நெடுங்குணம், வேப்பம்பட்டு, கோனமங்கலம், வெளக்கம்பட்டு, மருத்துவம்பாடி, இடையங்குளத்தூர், கரிப்பூர், நம்பேடு, உலகம்பட்டு, கங்கைசூடாமணி, முடையூர், ஆத்துரை, தேவிகாபுரம், ஓதலவாடி, தேவிமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ளது. ஷேர் பண்ணுங்க


