News November 28, 2025
BREAKING கோவை: “தவெகவின் வெற்றி உறுதி”

தவெகவில் இணைந்த செங்கோட்டையைன் இன்று சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் தவெகவிற்கு மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது. வரும் 2026ம் ஆண்டில் விஜய் முதலமைச்சராக வருவார். அவருக்கு நான் உறுதுணையாக இருப்பேன். விஜய் உடன் தான் மக்கள் சக்தி உள்ளது. என் உயிர் மூச்சு உள்ளவரை தவெகவிற்கு பணியாற்றுவேன்” என தெரிவித்தார்.
Similar News
News December 2, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.03) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், ஆனைமலை, வே.புதூர், சேத்துமைடை, மாரப்பகவுண்டன்புதுார், ஒடையகுளம், குப்புச்சிபுதூர், ராமச்சந்திராபுரம், சரளைபதி. கிழவன்புதூர், செம்மேடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 2, 2025
கோவைக்கு விடுமுறை: எழுந்த கோரிக்கை!

கோவையில் நாளை கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் தீப திருநாளன்று விடுமுறை அறிவித்திருப்பது போல் கோவையிலும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டி இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பாக மாநில பொறுப்பாளர் சூர்யா தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (டிசம்பர்.1) மனு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
News December 2, 2025
கருமத்தம்பட்டி அருகே 16 பேர் அதிரடி கைது!

கருமத்தம்பட்டி அருகே கொள்ளுப்பாளையம் பகுதியில், கருமத்தம்பட்டி போலீசார் வழக்கமாக ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு தென்னந்தோப்பு பகுதியில் சேவல் சண்டையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்து, 2 சேவல்கள், ரொக்கப் பணம் ரூ.9700, 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


