News November 27, 2025
SIR விண்ணப்பங்களை உடனே சமர்ப்பிக்க ஆட்சியரின் அவசர வேண்டுகோள்

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக இரண்டு நாட்களில் பொதுமக்கள் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்களை வாக்குச்சாவடி முகவர்களிடம் அளிக்க மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் டிசம்பர் 4 ஆம் தேதி வரை அவகாசம் இருந்தாலும் கூட கனமழை காரணமாக இன்றும் நாளையும் இரு தினங்களை படிவங்களை வாக்குச்சாவடி முகவரிடம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Similar News
News December 2, 2025
விழுப்புரம்: ஒரே நாளில் 12பேர் கைது!

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களை அச்சறுத்தும் வகையிலும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய 12 பேரை நேற்று போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். விக்ரவாண்டி, திருக்கோவிலூர், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுமக்களைப் பாதுகாக்க போலீசார் இத்தகைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றனர்.
News December 2, 2025
விழுப்புரம்: பைக் மோதி ஒருவர் பரிதாப பலி

கிளியனூர் அடுத்த டீ பரங்கிணி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமுத்து இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் புதுக்குப்பத்தில் நிகழ்ச்சிக்கு சென்று தன் நண்பருடன் வரும் போது டீ பரங்கினி சாலையில் எதிரே வந்த பைக் மோதி மோதி செல்லமுத்து படுகாயமடைந்தார். இருவரையும் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் செல்லமுத்து உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
News December 2, 2025
தவறவிட்ட தங்க நகை: மீட்டு தந்த போலீசார்

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த பிரசாந்தி என்பவர் திருவண்ணாமலையிலிருந்து இன்று சென்னை திரும்பும் வழியில் திண்டிவனம் அருகே உள்ள உணவகத்தில் தவறவிட்ட 18 சவரன் தங்க நகைகள் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை ரோஷனை போலீசார் உரியவரிடம் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


