News November 27, 2025
தருமபுரி எழுத்தாளர்களுக்கு நிதியுதவி!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் சார்பில் ஆண்டும் தோறும் சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தேர்ந்தெடுக்கப்பட்டு, தலா ரூ.1,00,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும், ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திலும் பெற்று கொள்ளலாம். என மாவட்ட ஆட்சியர் (இன்று.27) அறிவித்தார்.
Similar News
News December 2, 2025
தருமபுரி: பிறப்பு சான்றிதழ் இல்லையா? Click here

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக 1.பள்ளியில் சேர 2.அரசாங்க வேலையில் பணியமர 3.பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே <
News December 2, 2025
தருமபுரி: டூவீலர் மோதி தொழிலாளி பலி!

பொம்மிடி பி.துரிஞ்சிப்பட்டியை சேர்ந்த விஜயன்(51). கூலி தொழிலாளி இவர் நேற்று (டிச.1) சொந்த வேலையாக, மின்சார வாரிய அலுவலகத்துக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி சென்றபோது, பின்னால் வந்த டூவீலர் விஜயன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜயன், சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பொம்மிடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 2, 2025
தர்மபுரி: மரத்தில் ஏறிய விவசாயி.. பரிதாப பலி!

ஏரியூர் அருகே கலப்பம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கொப்பலூர் கிராமத்தை சேர்ந்த ரகுபதி (39) விவசாயி, இப்பகுதியில் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், விநாயகருக்கு அபிஷேகம் செய்ய நேற்று முன்தினம் இளநீர் வெட்ட மரத்தில் ஏறினார். அப்போது மரத்தில் இருந்து கீழே தவறி விழுத்தார். அருகில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் பரிதாபமாக உயிரிழந்தார்.


