News November 27, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (நவ.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 2, 2025

செங்கல்பட்டு: ஆமினி பஸ் கவிழுந்து விபத்து!

image

மாமல்லபுரம் அருகே கடம்பாடி கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பஸ் நேற்று நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அதிவேகம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பேருந்தில் பயணம் செய்த 8 பேர் காயமடைந்தனர். தீயணைப்புத் துறையினர் கண்ணாடியை உடைத்து பயணிகளை மீட்டனர்; காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

News December 2, 2025

செங்கல்பட்டு: வெவ்வேறு இடங்களில் 2 பேர் பலி!

image

மறைமலை நகர் ஜி.எஸ்.டி. சாலையில் தனியார் பேருந்து மோதியதில், பைக்கில் சென்ற தென்காசியைச் சேர்ந்த முத்துசெல்வன் (22) உயிரிழந்தார்; அவரது 2 நண்பர்கள் படுகாயமடைந்தனர். மற்றொரு சம்பவத்தில், சிங்கப்பெருமாள் கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பலியானார். இந்த 2விபத்துகள் குறித்தும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

News December 2, 2025

செங்கல்பட்டு: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

image

‘டிட்வா’ புயல் காரணமாக இன்று (டிச.2) காலை 8 மணி வரை செங்கல்பட்டில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டி. சினேகா உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!