News November 26, 2025
இவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை ₹1,000

மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. CM ஸ்டாலின் வரும் 15-ம் தேதி தகுதி வாய்ந்த பயனாளர்களின் அக்கவுண்டுக்கு ₹1,000 நிச்சயம் வரும் என உறுதி அளித்துள்ளார். இதனிடையே, வரும் நாள்களில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகள் செயல்பாட்டில் உள்ளதா என்பதை அறிய ₹1 சோதனை அடிப்படையில் செலுத்தப்பட உள்ளது. இதனால், உங்கள் வங்கிக் கணக்கின் KYC, செல்போன் எண்ணை ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
Similar News
News December 2, 2025
ரெட் அலர்ட்.. கனமழை வெளுத்து வாங்கும்

தமிழ்நாட்டில் இன்றும் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் IMD ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரைகளில் இருந்து 25 கிமீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. 3 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும், இந்த தாழ்வு மண்டலம் இரவில் சென்னை அருகே வரவிருப்பதால், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
கரூர் துயர வழக்கை CBI விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு

கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை CBI விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில்(SC) தவெக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழக அரசு நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு(SIT) விசாரணை தொடர அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. SC உத்தரவின்பேரில் CBI அதிகாரிகள் ஒரு மாதமாக கரூரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 2, 2025
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக IMD தெரிவித்துள்ளது. இது சென்னைக்கு 30 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது இன்று இரவு சென்னை – பாண்டிச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


