News November 25, 2025

எஸ் ஐ ஆர் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்

image

இன்று (நவ.25) கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும், சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணிகளை ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அவர்கள் ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கினார். இணையத்தில் பதிவேற்றும் பணி மற்றும் எஸ் ஐ ஆர் பணிகள் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இருந்தனர்.

Similar News

News March 12, 2026

கள்ளக்குறிச்சி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

கள்ளக்குறிச்சி மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

கள்ளக்குறிச்சி வந்தடைந்தார் துணை முதல்வர்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கிறார். அதற்காக இன்று அவர் கள்ளக்குறிச்சி வந்தடைந்த நிலையில், வடக்கு மற்றும் தெற்கு திமுக நிர்வாகிகள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும், மகளிரணியைச் சேர்ந்த தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டு வரவேற்பளித்தனர்.

News March 12, 2026

கள்ளக்குறிச்சி: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!