News November 14, 2025
புதுவை: அதிநவீன மிதவை கருவி சீரமைப்பு

மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், கடல் நீரின் தன்மையை அறியும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி புதுவை துறைமுகத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அதிநவீன கருவிகள் பொருந்திய மிதவைகள் நிறுவப்பட்டுள்ளன. நேற்று அதிகாரிகள் படகில் சென்று, அந்த மிதவை எடுத்து கரைக்கு கொண்டுவந்து பெயிண்ட் அடித்து சேதமடைந்த பகுதியை சீரமைத்தனர்.
Similar News
News November 14, 2025
காரைக்காலில் மின் கட்டணம் வசூல் மையம் இயங்கும்

மின் நுகர்வோர்கள் கவனத்திற்கு நாளை (15.11.2025) சனிக்கிழமை காரைக்கால் டவுன், தலைமை அலுவலகம், நேரு நகர், கோட்டுச்சேரி, நெடுங்காடு, அம்பகரத்தூர், திருநள்ளார், நிரவி மற்றும் திருமலைராயன்பட்டினம் மின் தொகை வசூல் மையம் காலை 8.45 முதல் மதியம் 1.00 மணி வரை வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்படுகிறது. மின் கட்டண பாக்கியனை உடனடியாக செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 14, 2025
காரைக்கால் நிர்வாகம் சார்பில் வாக்காளர் உதவி மையம்

காரைக்கால் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி 2026 நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமான விவரங்களை பெற காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கென வாக்காளர் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 யை பயன்படுத்தியும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம், மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
புதுச்சேரி: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், போலியான வர்த்தக செயலிகளிலும் Fake Share Market App இணையவழி மோசடிக்காரர்கள் உருவாக்கிய செயலிகளிலும், பணம் சம்பாதிக்கும் ஆசையில் வர்த்தகத்தில் அது பற்றிய புரிதல் இல்லாமல், எந்த கணக்குகளிலும் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் Whatsapp, facebook ,instagram போன்ற சமூக வலைதளங்களில் வரும் ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் விளம்பரங்களை நம்ப வேண்டாம்.


