News November 14, 2025
நகை கடன்… முக்கிய அறிவிப்பு

வெள்ளி நகைகள், நாணயங்களுக்கு வங்கிகளில் கடன் வழங்கும் நடைமுறை 2026 ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது. கடனை திருப்பி செலுத்தவில்லை எனில் நகைகளை வங்கிகள் ஏலம் விடலாம். ஆனால், ஏல விவரங்களை தாய் மொழியில் உரிமையாளருக்கு தெரிவிக்க வேண்டும். ஏலம் நடந்தால், உபரித் தொகை 7 நாள்களுக்குள் அவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். கடனை முறையாக செலுத்திவிட்டால், நகைகளை 7 நாள்களுக்குள் திருப்பி ஒப்படைக்க வேண்டும். SHARE IT
Similar News
News November 14, 2025
பெரும் பின்னடைவில் காங்: ராகுல், பிரியங்கா எங்கே?

பிஹார் தேர்தலில் காங்., 5 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. காங்.,கின் முகமாக அறியப்படும் ராகுல் காந்தியின் பிரசாரம் போதுமானதாக இல்லை என்று காங்கிரஸார் புலம்புவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தேர்தல் முடிவு வெளியாகும் இன்றும் ராகுல் ஐரோப்பாவிலும், பிரியங்கா நியூயார்க்கிலும் உள்ளனர். இதனால் தேர்தலை அவர்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News November 14, 2025
பிஹார் தேர்தல்: 25 வயதில் MLA-வான பாடகி

பிஹார் தேர்தலில் 25 வயது பாடகி மைதிலி தாகூர், அலிநகர் தொகுதியில் வாகை சூடியுள்ளார். BJP வேட்பாளரான அவர் 84,000-க்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட RJD-ன் பினோத் மிஷ்ரா 10,000-க்கும் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இதன் மூலம், பிஹாரின் இளம் MLA என்ற சாதனையையும் மைதிலி தாகூர் படைத்துள்ளார். இனி அவரது குரல் சட்டமன்றத்திலும் ஒலிக்கப் போகிறது.
News November 14, 2025
உங்கள் மூக்கை பற்றி இந்த சுவாரஸ்ய தகவல் தெரியுமா?

அன்றாடம் பல வாசனைகளை நாம் முகர்கிறோம். இதில் சுமார் 50,000 வெவ்வேறு வாசனைகளை உங்கள் மூளையில் உள்ள ’olfactory bulb’ என்ற பகுதி நினைவில் சேமித்து வைத்திருக்குமாம். இதுதான், ஒரு வாசனைக்கு பின்னால் இருக்கும் நினைவையும் பாதுகாத்து வைக்கிறதாம். இதனால்தான் ஒருவரின் பெயர் அல்லது முகத்தை மறந்தால் கூட அவர்கள் தொடர்புடைய வாசனையை உங்களால் மறக்க முடிவதில்லை. SHARE.


