News November 14, 2025

திருச்சி: BILLA MONEY நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

image

திருச்சி மாநகரில் அமைந்துள்ள பிரபல டிரேடிங் நிறுவனமான BILLA MONEY-யில் காலியாக உள்ள MARKETING EXECUTIVE / TELE CALLER பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் டிகிரி முடித்த, 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்/பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.8,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>>, வரும் நவ.20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Similar News

News November 14, 2025

திருச்சி மாவட்டத்தில் 72.4 மி.மீ மழை பதிவு

image

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (நவ.14) மாலை முதல் நள்ளிரவு வரை மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக மண்ணச்சநல்லூர் தொகுதி சிறுகுடி பகுதியில் 22.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் துவாக்குடி பகுதியில் 10.2 மி.மீ, வாத்தலை அணைக்கட்டு பகுதியில் 3.8 மி.மீ என மாவட்டம் முழுவதும் 72.4 மில்லி மீட்டரும், சராசரியாக 3.02 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 14, 2025

திருச்சி: தாட்கோ சார்பில் பயிற்சிகள் அறிவிப்பு

image

தாட்கோ சார்பில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு, சர்வதேச விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை பயிற்சி, பயணச்சீட்டு முன்பதிவு அடிப்படை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. 18 முதல் 23 வயது நிரம்பிய, +2 அல்லது பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தாட்கோ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 14, 2025

திருச்சி: சிறந்த எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த 11 சிறந்த எழுத்தாளர்களுக்கு தல ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் <>https://www.tn.gov.in/form view.php?dep id=MQ==<<>> என்ற இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, வரும் 28ம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!