News November 14, 2025

புதுவை: பெற்றோர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

image

புதுவையில் போக்குவரத்து போலீசார் நேற்று கொசக்கடை தெரு, நேரு வீதிகளில் திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது இருசக்கர வாகனங்கள் ஓட்டி வந்த 5 சிறுவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல், மதுபோதையில் வாகனங்கள் ஓட்டி வந்தவர்கள் என 250 பேருக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Similar News

News November 14, 2025

புதுவை: ஜிப்மரில் நேரம் நீட்டிப்பு

image

புதுவை கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், புறநோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு ரத்த பரிசோதனை மையம் மற்றும் ரத்த வங்கியில் செயல்பட்டு வரும் ரத்த பரிசோதனை மையம் ஆகியவற்றின் செயல்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாட்களில் காலை 6.30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 6.30 முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் என தகவல்.

News November 14, 2025

புதுவை: ரூ.88,635 சம்பளத்தில் வேலை ரெடி!

image

ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 14, 2025

BREAKING: புதுச்சேரியில் நாளை விடுமுறை

image

புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்தியில், “நாளை (நவ.15) தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி (டெட்) தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, புதுச்சேரியைச் சேர்ந்த பெரும்பாலான ஆசிரியர்கள் எழுத உள்ளனர். அதனால், நாளை விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனையேற்று, நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!