News November 14, 2025
வாய்விட்ட டிரம்ப்; சமாளிக்கும் USA அரசு

USA-வில் திறமையானவர்கள் இல்லை என <<18265884>>டிரம்ப்<<>> கூறியிருந்தார். இதற்கு அமெரிக்கர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், திறமை கொண்ட வெளிநாட்டு பணியாளர்களை USA-வுக்கு கொண்டு வந்து, 3-7 ஆண்டுகள் வரை அவர்கள் மூலம் அமெரிக்கர்களுக்கு பயிற்சியளித்து, பின்னர் அவர்களை தாயகம் அனுப்பி வைக்க வேண்டும் என்பதே டிரம்ப்பின் திட்டம் என கூறி, அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News November 14, 2025
பிஹாரா இது! அமைதியாக நடந்த தேர்தல்

பிஹாரில் தேர்தல் என்றாலே கலவரமும் சேர்ந்தே நடக்கும். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. இந்த முறை வாக்குப்பதிவின் போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மக்களும் பெரும் அளவில் திரண்டுவந்து வாக்களித்தனர். குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்த வன்முறை சம்பவங்களும் இல்லை. தற்போது வாக்கு எண்ணிக்கையும் அமைதியாகவே நடந்து கொண்டிருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இது நிச்சயம் நல்ல மாற்றம் தானே?
News November 14, 2025
உலகின் முதல் AI குழந்தை!

பிரமாண்டமாய் வளர்ந்து வரும் AI, தற்போது கருவை உருவாக்கி அறிவியல் புரட்சி செய்துள்ளது. மெக்ஸிகோவில் 40 வயது பெண் ஒருவர், AI உதவியுடன் கருத்தரித்து, உலகின் முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த IVF சிகிச்சையில், AURA என்ற AI ரோபோ சரியான விந்தணுவை, கருமுட்டையில் செலுத்தி வளர்க்கிறது. லட்சக்கணக்கில் செலவாகும் IVF சிகிச்சை இனி மலிவாகவும், வெற்றிகரமாகவும் மாறும் என்ற நம்பிக்கையை AI அளித்துள்ளது.
News November 14, 2025
தலைகீழாக மாற்றம்… அடுத்தடுத்து ட்விஸ்ட்

பிஹாரில் 2020-ஐ ஒப்பிடுகையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் நிலை தலைகீழ் சரிவை கண்டுள்ளது. ஆரம்பத்தில் கடும்போட்டி நிலவிய நிலையில், 9 மணிக்கு மேல் NDA கூட்டணியின் முன்னிலை ஜெட் வேகத்தில் எகிறியது. தற்போது NDA கூட்டணி 196 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், MGB கூட்டணி வெறும் 39 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதில் தனித்து BJP -89, JDU – 79 இடங்களில் முன்னிலையில் உள்ளன.


