News November 14, 2025
CM நிதிஷ்குமாரின் வருங்காலம் கேள்விக்குறி?

பிஹார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஜே.டி.யு கட்சியை விட அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. காலை 9.30 மணி நிலவரப்படி, பாஜக 71 தொகுதியிலும், ஜே.டி.யு 58 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன. ஏற்கனவே NDA கூட்டணியின் CM வேட்பாளர் யார் என முடிவு செய்யப்படாத நிலையில், ஜே.டி.யு நிதிஷ்குமார் இம்முறை CM வேட்பாளர் ஆவது சந்தேகம்தான் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
Similar News
News November 14, 2025
நீரிழிவு நோயை உண்டாக்கும் 7 பழக்கங்கள்!

இந்த பழக்கங்களின் மூலம் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் வரலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர் ✦காலை நேர உணவை தவிர்ப்பது ✦ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது ✦குறைவான நேரம் தூங்குவது அல்லது முறையாக தூங்கும் பழக்கம் இல்லாதது ✦அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வது ✦அதிக சர்க்கரையுள்ள பானங்கள் பருகுவது ✦உடல்பயிற்சியின்மை ✦அதிக மன அழுத்தம். இப்பதிவை அதிகளவில் பகிரவும்.
News November 14, 2025
கண்ணீருடன் உதயநிதி நேரில் அஞ்சலி

உதயநிதியின் நண்பரும், அவரின் டிரைவருமான பாலாவின் தந்தை ரவி, உடல்நலக்குறைவால் தனியார் ஹாஸ்பிடலில் உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்டு வேதனையடைந்த உதயநிதி, முதல் ஆளாக ஹாஸ்பிடலுக்கு நேரில் சென்று, ரவியின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். அப்போது, ரவியின் உடலை பார்த்ததும் அவர் கண்கலங்கி அழுதார். தற்போது திமுக முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
News November 14, 2025
தோல்வின்னு சொல்ல முடியாது: செல்வப்பெருந்தகை

பிஹாரில் MGB கூட்டணி 50 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. குறிப்பாக, காங்., 5 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. ஆனால் இதை தோல்வி என்று சொல்ல முடியாது, வெற்றிவாய்ப்பை இழந்திருப்பதாக சொல்கிறார்கள் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தேர்தலின் முழு முடிவை பொறுத்திருந்து பார்ப்போம் என்ற அவர், ஆட்சி, அதிகாரத்தை சுவைக்க நினைக்கும் இயக்கம் காங்., அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.


