News November 14, 2025

சிவகாசி: மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் நீக்கம்

image

வெம்பகோட்டை பகுதியில் இரிடியத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 3 மாதத்தில் ரூ.1 கோடி கிடைக்கும் என கூறி ரூ.1.38 கோடி மோசடி செய்த ராஜபாளையம் சேத்தூர் பேரூராட்சி அ.தி.மு.க 8-வது வார்டு கழகச் செயலாளர் பட்டுராஜன், ஒன்றிய மகளிரணி செயலாளர் கந்தலீலா மற்றும் ராணிநாச்சியார் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மூவரையும் கட்சியிலிருந்து நீக்கி EPS நடவடிக்கை எடுத்துள்ளார்.

Similar News

News November 14, 2025

சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் ஏமாற்றம்

image

சிவகாசியில் வரும் 2026 தீபாவளி பண்டிகைக்காண பட்டாசு உற்பத்தி பணிகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பே துவங்கியது. ஆனால் துவக்கத்திலிருந்தே அவ்வப்போது பெய்து மழை மற்றும் கடும் குளிர் நிலவுகிறது. எனவே பட்டாசு தயாரிக்க போதிய வெப்பநிலையின்றி பட்டாசு உற்பத்தி பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். பட்டாசு தட்டுப்பாட்டை போக்க முன்கூட்டியே உற்பத்தியை துவங்கிய உற்பத்தியாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

News November 14, 2025

JUST IN அருப்புக்கோட்டை: விபத்தில் உடல் நசுங்கி பலி

image

அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி புரட்டாசி வீதியைச் சேர்ந்தவர் சீனிவாசகன்(65). இவர் இன்று (நவ.14) சீனிவாசகன் ஆத்திபட்டி பஸ் ஸ்டாப் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த டாரஸ் லாரி மோதி லாரி டயருக்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 14, 2025

ஸ்ரீவி: தனியார் நிறுவன ஊழியருக்கு 20 ஆண்டு சிறை 

image

விருதுநகர் குமாரலிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணநாராயணன். இவர் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார் .இவர் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நிலையில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து கிருஷ்ணநாராயணனை கைது செய்தனர். இதில் நேஏறு கிருஷ்ணநாராயணனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!