News November 14, 2025
அரியலூர்: மோட்டார் சைக்கிள் திருடிய நபர் கைது

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போலீசார் கல்லாத்தூர் பகுதியில் வாகன தணிக்கையில் இருந்த போது, அவ்வழியாக வந்த கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பகுதியைச் சேர்ந்த வீரகண்டமணியை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில், அவர் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவர் மீது குற்ற சம்பவங்கள் இருக்கிறதா என்று ஜெயங்கொண்டம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 14, 2025
அரியலூர்: காவல் நிலையத்தை ஆய்வு செய்த ஐ.ஜி

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் (ஐ.ஜி) ஜோஷி நிர்மல் குமார் நேற்று (நவ.13) அரியலூர் மாவட்ட காவல் அலுவலகம் வருகை புரிந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி-யுடன் மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை செய்தார். இதனையடுத்து காவல் அலுவலகத்தில் இயங்கும் காவல்துறை புகைப்பட பிரிவினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News November 14, 2025
அரியலூர்: ரூ.88,635 சம்பளத்தில் வேலை ரெடி!

ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 14, 2025
தமிழ்நாட்டிலேயே அரியலூர் தான் முதலிடம்

அரியலூர் மாவட்டத்தினை பசுமை நிறைந்த மாவட்டமாக உருவாக்கும் வகையில் கடந்த செப்டம்பர் தொடங்கி அனைத்து கிராமங்கள் தோறும் நீர்நிலைகள் அரசு புறம்போக்கு இடங்களில் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து பனை விதை நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை அரியலூர் மாவட்டத்தில் 18,50,000 பனை விதைகள் நடவு செய்து தமிழ்நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.


