News November 14, 2025
புதுச்சேரி: கல்லுாரி மாணவி தற்கொலை!

புதுச்சேரி, எல்லைபிள்ளைச்சாவடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அலமேலு. இவரது தங்கை மகேஸ்வரி பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார். இவர், உறவினர் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. காதலனின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த மகேஸ்வரி, வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ரெட்டியார் பாளையம் போலீசார் நேற்று வழக்குப் பதிந்தனர்.
Similar News
News November 14, 2025
BREAKING: புதுச்சேரியில் நாளை விடுமுறை

புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்தியில், “நாளை (நவ.15) தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி (டெட்) தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, புதுச்சேரியைச் சேர்ந்த பெரும்பாலான ஆசிரியர்கள் எழுத உள்ளனர். அதனால், நாளை விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனையேற்று, நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
புதுவை: வாகன பேன்சி எண்கள் ஆன்லைனில் ஏலம்!

புதுவை போக்குவரத்து துறையின் PY-01 DF வரிசையில் உள்ள எண்கள் https://parivahan.gov.in/fancy இணையதளத்தில் நவ.19 காலை 11 மணி முதல் மாலை 4:30 வரை ஏலம் விட உள்ளது. இந்த ஏலத்தில் பங்கு பெறுவதற்கு தேவையான பெயர் மற்றும் https://parivahan.gov.in/fancy இணையதளத்தில் ‘நியூ பப்ளிக் யூசர்’ மூலமாக நவ.18 வரை பதிவு செய்துகொள்ளலாம் என போக்குவரத்து ஆணையர் சிவகுமார் தெரிவித்தார்.
News November 14, 2025
புதுச்சேரி: 480 மதுபாட்டிகள் கடத்தல் – 2 பேர் கைது!

புதுச்சேரி – விழுப்புரம் எல்லையில் உள்ள கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடியில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த கார் சிக்கியது. இதில் 480 மதுபாட்டில்களை புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த சுகுந்தன் (24), தீபக் (20) ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அவர்கள் பயண்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


