News November 12, 2025
தென்காசி: ஆசிரியர் கொலை; 3 பேருக்கு ஆயுள் தண்டனை

பாவூர்சத்திரத்தில் பட்டதாரி ஆசிரியர் சந்தோஷ் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு பிராந்தியில் விஷம் கலந்து கொலை செய்து, தனது வீட்டில் புதைத்த பாவூர்சத்திரத்தை சேர்ந்த பொன் செல்வி, அவரது தந்தை தங்கப்பாண்டி தம்பி முருகன் ஆகியோருக்கு இன்று ஆயுள் தண்டனையும், தடயத்தை மறைத்ததற்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதம் விதித்து தென்காசி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
Similar News
News November 12, 2025
பாப்பான்குளம் பகுதியில் பிடிபட்ட மலைப்பாம்பு

பாப்பான்குளம் அருகே உள்ள சங்கரநாராயணர் சுவாமி கோவில் அருகே (நவம்பர் 12) இன்று சுமார் 10 அடி நீளம் உள்ள மலை பாம்பு இருப்பதை கண்ட அப்பகுதி பொது மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பெயரில் சம்பவஇடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 அடி நீளம் பாம்பை பிடித்து வனத்துறையிடம் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
News November 12, 2025
தென்காசி: நாளை சட்டப்பேரவை பொதுக்குழு வருகை

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலகத்தின் 2024-2026ம் ஆண்டுக்கான பொதுக் கணக்குக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக் குழு உறுப்பினர்கள் 13.11.2025 அன்று தென்காசி மாவட்டத்தில் ஆய்வு பயணம் மேற்கொள்ள உள்ளனர். மேலும், அன்று பிற்பகல் 02.30 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் குழு மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடக்கிறது.
News November 12, 2025
தென்காசி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

தென்காசி மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <


