News November 12, 2025
மோடி அரசின் கருவி தேர்தல் ஆணையம்: அப்பாவு

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் SIR பணி நடந்ததற்கும் இப்போது நடப்பதற்கும் வித்தியாசம் உள்ளதாக சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் நடுநிலைமையை தவறவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், PM மோடியின் ஆணையை ஏற்று நடக்கும் அமைப்பாக அது மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார். பாஜக ஆட்சிக்கு முன்பு ECI எந்த ஒரு சார்பும் இல்லாத அமைப்பாக இருந்ததாகவும் அப்பாவு குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 12, 2025
பாரதியார் பாடல் ஸ்டைலில் திமுகவை விமர்சித்த விஜய்

தவெகவிற்கு எதிராக அவதூறு அரசியல் ஆட்டத்தை திமுக தொடங்கிவிட்டதாக விஜய் சாடியுள்ளார். பெரியார், அண்ணா கொள்கைகளை திமுகவினர் மறந்துவிட்டதாகவும், அவர்கள் TVK-ஐ கொள்கையற்றவர்கள் என்று கூறிட மன உளைச்சலே காரணம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பாரதியார் பாடலை மாற்றி, பவளவிழா பாப்பா நீ.. பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா.. நீ நல்லவர் போல நடிப்பதை பார்த்து.. நாடே சிரிக்கிறது பாப்பா என விஜய் விமர்சித்துள்ளார்.
News November 12, 2025
₹10 நாணயம்.. சந்தேகத்துக்கு இதுதான் காரணம்

2017-ல் ₹10 நாணயம் வெளியானது முதலே, இது செல்லுமா செல்லாதா என்ற சர்ச்சை அடிக்கடி எழுகிறது. ஒருசிலர் வாட்ஸ்ஆப்பில் பரப்பிய வதந்தி தான் இதற்கு காரணம் எனப்படுகிறது. மேலும், இதுவரை 14 வெவ்வேறு ₹10 நாணயங்களை RBI வெளியிட்டுள்ளது. இவற்றில் 10 மேடுகள் (ridges) உள்ளது செல்லும் என்றும் 15 மேடுகள் உள்ள நாணயங்கள் செல்லாது என்றும் ஒரு வதந்தி உள்ளது. எதுவும் உண்மையல்ல. அனைத்து ₹10 நாணயங்களும் செல்லும்.
News November 12, 2025
₹10 ரூபாய் காயின் செல்லாதா? CLARITY

விஷமிகள் சிலர் பரப்பிய வதந்தியால், நாட்டின் பல இடங்களில் இன்றும் கூட ₹10 ரூபாய் நாணயங்களை மக்கள் வாங்க தயங்குகின்றனர். ஆனால், தயக்கம் வேண்டாம். ₹10 நாணயம் சட்டப்பூர்வமாக செல்லத்தக்கது. அதை வாங்க மறுப்பது சட்டவிரோதமானது என்று RBI ஏற்கெனவே தெளிவுப்படுத்தி உள்ளது. யாராவது வாங்க மறுத்தால் 14440 எண்ணில் அழைத்தும் புகார் அளிக்கலாம். இதை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.


