News November 12, 2025
திருப்பத்தூர் காவல்துறையின் அறிவுறுத்தல்!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் தங்களது சமூக வலைதளம் பக்கத்தில் இன்று (நவ.12) விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்களது வாகனங்களை இயக்கும்போது முன்னதாகவே வாகனத்தில் சாவி போடும் முன் சீட் பெல்ட் அணிவோம்! பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்!. என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Similar News
News November 12, 2025
திருப்பத்தூர்: எஸ்.பி அலுவலகத்தில் குறைத்தீர்வு கூட்டம்

திருப்பத்தூர், மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (நவ.12) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையில் நடைபெற்றது.
இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 42 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
திருப்பத்தூர்: தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <
News November 12, 2025
பேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை செய்த எம்.எல்.ஏ.

திருப்பத்தூர் மாவட்டம். கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட உடையாமுத்தூர் ஊராட்சி, மாரியம்மன் கோயில் பகுதியில், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 2.50 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்க இன்று (நவ.12) திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி அவர்கள் பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரநிதிகள் பலர் உடனிருந்தனர்.


