News November 12, 2025

நாகை: ரேஷன் கடையில் பிரச்சனையா?

image

நாகை மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களை வழங்கினால், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் நடந்தால் இனி கவலை வேண்டாம். உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 12, 2025

பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த எஸ்பி

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், எஸ்பி செல்வகுமார் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து, 9 மனுக்களை பெற்றார். மேலும் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மனுதாரர்களுக்கு உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

News November 12, 2025

நாகை: CM ஸ்டாலினை விமர்சித்தவருக்கு சிறை

image

தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை தவறாக விமர்சித்து, வாட்சப் மற்றும் முகநூலில் புரட்சித்தமிழர் மக்கள் கழக நிறுவனத் தலைவர் ஆனந்தராஜ் என்பவர் பதிவிட்டுள்ளார். அவர் மீது, திமுக நிர்வாகி கொடுத்த புகாரில் கீழையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, ஆனந்தராஜை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள்ளார்.

News November 12, 2025

நாகை: ஆட்சியர் அலுவலகத்தில் புத்தாக்கப் பயிறசி

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், புத்தாக்கப் பயிற்சி இன்று (12.11.2025) காலை 10 மணி அளவில் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் தொடர்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!