News November 12, 2025
சிவகாசியில் சிறுமி கர்ப்பம்; மூவர் மீது வழக்கு

திருத்தங்கல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், தனுஷ், முனீஸ் ஆகிய மூவரிடமும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முனீஸ் என்ற இளைஞர் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து மதுபோதையில் இருந்த சிறுமியிடம் அத்துமீறியுள்ளார். இதையடுத்து சிறுமி கர்ப்பமான நிலையில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் இளைஞர்கள் மூவர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
Similar News
News November 12, 2025
சிவகாசியில் கடையை உடைத்து கொள்ளை

சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி ரோட்டை சேர்ந்தவர் ஸ்ரீபன்ராஜ் (29). இவர் செங்கமலநாச்சியார்புரம் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்தநிலையில் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது விலை உயர்ந்த இரு செல்போன்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 12, 2025
விருதுநகர்: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

விருதுநகர் மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு.<
News November 12, 2025
ஊஞ்சல் உற்சவத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஊஞ்சல் உற்சவம் நவ.8 அன்று தொடங்கியது. இந்நிலையில் 4 – ம் நாளான நேற்று கோயில் பிரகாரத்தில் ஆண்டாள், ரங்கமன்னார் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


