News November 12, 2025

வேற சார்ஜரில் போனை சார்ஜ் பண்றீங்களா?

image

வீட்டுக்கு வரும் வோல்டேஜ் சப்ளையை போனுக்கேற்றபடி மாற்றுவது தான் சார்ஜர்களின் வேலை. 67W, 80W, 30W என சார்ஜர்களில் குறிப்பிடப்படுபவை அனைத்தும் அதனுடைய பவரை குறிக்கின்றன. இதனால் அந்தந்த போனுக்கு அதனுடைய சார்ஜரை பயன்படுத்துவது அவசியம். இல்லையென்றால், போனின் பேட்டரி பழுதாகலாம், உள்ளிருக்கும் சர்க்யூட்கள் பழுதாகும், சாப்ட்வேர் பிரச்னைகள் வரலாம் என்கின்றனர். இந்த தவறை செய்யும் அனைவருக்கும், SHARE THIS.

Similar News

News November 12, 2025

`Bro Code’ படத்தின் தடையை நீக்க HC மறுப்பு

image

ரவி மோகன் தயாரித்து நடிக்கும் ‘Bro Code’ படத்தின் டைட்டில், தங்களது மதுபானத்தின் பெயர் என கூறி இண்டோ ஸ்பிரிட் என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி HC தலைப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் தடையை நீக்க கோரி ரவி மோகன் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால் அதை நீக்க டெல்லி HC மறுப்பு தெரிவித்துவிட்டது.

News November 12, 2025

12,000 பணியிடங்களை உடனே நிரப்புங்க: அன்புமணி

image

மருத்துவ துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காமல், டாக்டர்களை இடமாற்றம் செய்து, உயிர்காக்கும் துறையை சாகடிப்பதே திமுகவின் சாதனை என்று அன்புமணி விமர்சித்துள்ளார். அரசு ஹாஸ்பிடல்களில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மருத்துவ பணியிடங்கள் வெறும் 18,000 தான் எனக்கூறியுள்ள அவர், இதில் 12,000 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். உடனே அந்த பணியிடங்களை நிரப்பவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News November 12, 2025

இறந்த மகனை அடையாளம் காட்டிய ‘Mom my first love’ டாட்டூ!

image

கையில் ‘Mom my first love’, ‘Dad my strength’ என மகன் குத்திய டாட்டூவை வைத்து தான், அவரை அடையாளம் காணும் நிலைக்கு ஒரு பெற்றோர் தள்ளப்பட்டுள்ளார். டெல்லி குண்டுவெடிப்பில், மரணமடைந்தவர்களின் உடலை அடையாளம் காண, இந்த டாட்டூ குறித்த செய்தி வெளியாக, பெற்றோர் மனமுடைந்து போயுள்ளனர். மகனின் கையில் இருக்கும் டாட்டூவை பார்த்து ஒரு நாள், ஆனந்தத்தில் கண்ணீர் வடித்த பெற்றோர் இன்று, மீளா துயரில் ஆழ்ந்துள்ளனர்.

error: Content is protected !!