News November 12, 2025
கிருஷ்ணகிரி: காணாமல் போனவர் ஏரியில் பிணமாக மீட்பு!

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிவராம் சிங் (22) தனது மனைவி & 2 குழந்தைகளுடன், அக்கொண்டப்பள்ளியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக இவரை காணவில்லை என இவர் மனைவி புகாரளிக்க, கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அக்கொண்டபள்ளியில் உள்ள ஏரியில் போலீசார் அவரது உடலை மீட்டனர். அவரது உடலை கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 12, 2025
கிருஷ்ணகிரி: தீராத நோய் தீர்க்கும் முருகன் கோவில்

காவேரிப்பட்டினம் அருகில் சுண்டக்காய்பட்டி என்ற கிராமத்தில் மலை மேல் கந்தர்மலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ‘வள்ளி குளம்’ என்று ஒரு குளம் இருக்கிறது. இக்கோயிலுக்கு சென்று இங்குள்ள குளத்தில் நீராடினால் தீராத நோய்கள் தீர்ந்துவிடும். மேலும் குளத்தின் தண்ணீரை வீட்டிற்கு எடுத்துச்சென்று தெளித்தால் சகல தோஷங்களும் நீங்கும், வியாபாரம் விருத்தியாகும். ஷேர் பண்ணுங்க!
News November 12, 2025
கிருஷ்ணகிரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News November 12, 2025
கிருஷ்ணகிரி: நீங்க G Pay / PhonePe / Paytm யூஸ் பண்றீங்களா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!


