News November 12, 2025

திருச்சி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம்.<> இங்கே கிளிக்<<>> செய்து, FILL ENUMERATION FORM என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு உங்களால் ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ள முடியும்! ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 12, 2025

திருச்சி: காணாமல் போனவர் பிணமாக மீட்பு

image

மணப்பாறை அடுத்த மணப்பட்டி பிரிவு அருகே இன்று காலை சீகம்பட்டியைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் சாலையோரத்தில் மர்மமான முறையில் இறந்த கிடந்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News November 12, 2025

திருச்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

திருச்சி மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News November 12, 2025

திருச்சி: கொத்தனார் மர்ம சாவு

image

கரூா் சா்ச் காா்னா் நீலிமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் பி.ராமசாமி (43). திருச்சியில் கொத்தனாராக வேலை செய்து வந்தாா். இந்நிலையில், இவா் குழுமணி பகுதியில் காலனியில் மா்மமான முறையில் இறந்துகிடப்பதாக உறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், ராமசாமியின் சடலத்தைக் கைப்பற்றி அவர் கொலை செய்யப்பட்டாரா? உட்பட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!