News November 12, 2025
தென்காசி கோவிலில் நாளை தேரோட்டம்

தென்காசி காசி விசுவநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா (நவ.05) கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நவ.13 காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. நாளை மறுநாள் நவ.14 காலை யானை பாலம் தீர்த்தவாரி மண்டபத்தில் தபசுக்கு எழுந்தருளல், மாலையில் தபசு காட்சி நடக்கிறது. அன்று இரவு சுவாமி அம்பாள் திருக்கல்யாண திருவிழா நடைபெற உள்ளது.
Similar News
News November 12, 2025
தென்காசி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

தென்காசி மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <
News November 12, 2025
சங்கரன்கோவில் வழியாக செல்லும் சிறப்பு ரயில் அறிவிப்பு

வண்டி எண் (07111- 07112) நான்டேட் – கொல்லம் சிறப்பு ரயில் கீழ்க்கண்ட தேதிகளில் இயங்கும்: 20.11.2025 முதல் 15.01.26 ஒவ்வொரு வியாழன் தோறும் ஹைதராபாத்தில் இருந்து புறப்படும். 22.11.25 முதல் 17.01.26 வரை ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் கொல்லம் ஜங்ஷனில் இருந்து புறப்படும். வழித்தடம் : நான்டேட் , கச்சிகுடா , கடப்பா , திருப்பதி , வேலூர் , திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, சங்கரன்கோவில் வழியாக கொல்லம் செல்லும்.
News November 12, 2025
ஆலங்குளம்: குளத்தில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு!

ஆலங்குளம் அருகே சண்முகபுரம் மேற்கு தெருவை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் மணிமுத்து வயது 75 மனைவி, நான்கு மகன்கள் உள்ளனர். மணிமுத்துவை காணவில்லை என்று நேற்று முன்தினம் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிய நிலையில் நேற்று வீட்டிற்கு அருகே இருக்கும் குளத்தில் மணிமுத்து உடல் இறந்தநிலையில் மிதந்துள்ளது. உடலை மீட்டு போலீசார் விசாரணை.


