News November 12, 2025
30 ஆண்டுகளில் இயற்கை பேரிடர்களால் 80,000 பேர் பலி

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் இயற்கை பேரிடர்களால் 80,000 பேர் பலியானதாக ‘The Climate Risk Index’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ள நிலையில், டொமினிகா, மியான்மர், ஹோண்டுராஸ் ஆகிய நாடுகள் முதல் 3 இடத்தில் உள்ளன. மேலும், 1995 முதல் 430 பேரழிவுகளால் 130 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
BREAKING: கூட்டணி முடிவை எடுத்தார் பிரேமலதா

தேமுதிக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், பெரும்பாலானோர் 15 தொகுதிகளுக்கு மேல் கொடுக்கும் கட்சியுடனும், சிலர் அதிமுகவுடனும் கூட்டணி அமைக்க வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நிர்வாகிகள் கருத்துகளை அமைதியாக கேட்டுக்கொண்ட பிரேமலதா, உங்களின் விருப்பப்படி முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
News November 12, 2025
சென்னை, கோவை பாதுகாப்பான நகரம்: அமைச்சர்

TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் பொய்யான புகார்களை கூறுவதாக கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பான நகரம் சென்னை, கோவைதான் என மத்திய அரசின் புள்ளி விவரம் கூறுவதாக தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட பெண்கள் திமுக ஆட்சியில்தான் தைரியமாக புகார் தருகிறார்கள் என கூறியுள்ளார். மேலும், சமூக நலத்துறை முறையாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
News November 12, 2025
எனக்கும் கடன் பிரச்னைகள் இருக்கு: விஜய் சேதுபதி

கோடிகள் சம்பாதிக்கும் தனக்கும் கடன் பிரச்னைகள் உள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், தான் ஆயிரத்தில் சம்பாதித்தபோது அதற்கான கடன் இருந்தது, லட்சத்தில் சம்பாதித்தபோதும் அதற்கான கடன் இருந்ததாக குறிப்பிட்டார். தற்போது கோடிகளில் சம்பாதித்தாலும் கடன் பிரச்னை தீரவில்லை என்று கூறிய அவர், அதனுடன் வாழ கற்றுக்கொண்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.


