News November 12, 2025
திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை!

இணையத்தில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலர் காதல் பேச்சு, நட்பு எனப் போலி சுயவிவரங்கள் மூலம் நம்பிக்கை பெற்று பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், ஏமாற்றத்துக்கு ஆளானால் உடனே 1930 எண்ணை அழைக்கவும் www.cybercrime.gov.in-ல் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 12, 2025
திண்டுக்கல்: இனி EB OFFICE செல்ல வேண்டாம்!

திண்டுக்கல் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News November 12, 2025
திண்டுக்கல்: கடன் தொல்லையா இன்று இங்க போங்க!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோயிலில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். இங்கு அஷ்டமி நாளான இன்று, 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News November 12, 2025
திண்டுக்கல்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

திண்டுக்கல் மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். SHARE பண்ணுங்க!


