News November 12, 2025
நாகை: ரயில் சேவை ரத்து

நாகை வழியாக காரைக்காலில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு–காரைக்கால் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணத்தால் ரயில் எண் 16239 (பெங்களூரு–காரைக்கால்), 16240 (காரைக்கால்–பெங்களூரு) ஆகிய ரயில்கள் வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
நாகை: ரேஷன் கடையில் பிரச்சனையா?

நாகை மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களை வழங்கினால், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் நடந்தால் இனி கவலை வேண்டாம். உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 12, 2025
நாகை: ஆட்சியர் அலுவலகத்தில் புத்தாக்கப் பயிறசி

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், புத்தாக்கப் பயிற்சி இன்று (12.11.2025) காலை 10 மணி அளவில் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் தொடர்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
நாகை: தேர்தல் தேதி அறிவிப்பு – கலெக்டர்

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நாகை மாவட்ட கிளைத் தேர்தல் குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் பி.ஆகாஷ் வெளியிட்ட அறிக்கையில், நாகை மாவட்ட செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவு வரும் நவம்பர் 24-ஆம் தேதி நாகப்பட்டினம் முதன்மை நிலையத்தில் நடைபெற உள்ளது. மேலும் தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


