News November 12, 2025
பாஜகவின் திருட்டுத்தனம்: செந்தில் பாலாஜி

TN மக்களின் வாக்குரிமையை பறிக்கும் பாஜகவுக்கு அதிமுக துணை போவதாக செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். வருமான வரித் துறை, ED, CBI மூலமாக பாஜக அரசு தேர்தலில் வெற்றி பெற நினைத்து தோல்வியடைந்தது எனவும், அதனால்தான் SIR மூலமாக திருட்டுத்தனமாக வெற்றிபெற நினைக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும், பிஹாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கியதை போல, TN-யிலும் நீக்க முயற்சிக்கிறார்கள் என விமர்சித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
டெல்லி குண்டுவெடிப்பு: மேலும் ஒரு டாக்டர் கைது

டெல்லி கார்வெடிப்பு வழக்கில் ஏற்கனவே 6 டாக்டர்கள் வரை கைதான நிலையில் 7-வதாக டாக்டர் தஜமுல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீநகரில் செயல்பட்டு வரும் மஹாராஜா ஹரிசிங் ஹாஸ்பிடலில் பணியாற்றி வந்த இவருக்கு, கார் வெடிப்பு சதியில் கைதான டாக்டர்களுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர் காஷ்மீரின் குல்காம் பகுதியை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
News November 12, 2025
சீக்ரெட் சர்வே எடுக்கிறாரா EPS?

தேர்தல் நெருக்கத்தில் கட்சிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் சர்வே எடுப்பது வழக்கம். ஆனால் இம்முறை தனது கட்சியினரிடமே சர்வே அசைன்மெண்ட்டை EPS கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு, பாஜகவுடனான கூட்டணி உதவுகிறதா, யாருடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவுக்கு ஓட்டு வரும் என சர்வே எடுக்கப்படவுள்ளதாம். இதனை வைத்தே அடுத்த கட்ட நகர்வை EPS முடிவு செய்யவுள்ளார் என்கின்றனர்.
News November 12, 2025
அரசு விடுமுறை அறிவிப்பு… ஆனால் ஏமாற்றம்

2026-க்கான பொதுவிடுமுறை பட்டியலை அரசு நேற்று வெளியிட்டது. இதில், மொத்தம் 24 அரசு பொதுவிடுமுறைகளில் 5 நாள்கள் வார விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. உழவர் திருநாள், தைப்பூசம், ரம்ஜான், தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகளும், சுதந்திர தினமும் வழக்கமான சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் வருவதால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


