News November 12, 2025
பாபர் அசாமின் மிக மோசமான சாதனை!

பாகிஸ்தான் நட்சத்திர ஆட்டக்காரர் பாபர் அசாம் மிக மோசமான சாதனை பட்டியலில் வேகமாக முன்னேறி வருகிறார். சதம் அடிக்காமல் தொடர்ச்சியாக அதிக ODI போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலில் அவர் விராட் கோலியுடன்(83 போட்டிகள்) 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த பட்டியலில் இலங்கையின் சனத் ஜெயசூர்யா (88) முதல் இடத்தில் இருக்கிறார். ஜெயசூர்யாவின் ரெக்கார்டை முந்துவாரா பாபர்?
Similar News
News November 12, 2025
அரசு விடுமுறை அறிவிப்பு… ஆனால் ஏமாற்றம்

2026-க்கான பொதுவிடுமுறை பட்டியலை அரசு நேற்று வெளியிட்டது. இதில், மொத்தம் 24 அரசு பொதுவிடுமுறைகளில் 5 நாள்கள் வார விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. உழவர் திருநாள், தைப்பூசம், ரம்ஜான், தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகளும், சுதந்திர தினமும் வழக்கமான சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் வருவதால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
News November 12, 2025
எப்போதுதான் ரிலீஸ் ஆகிறது சூர்யாவின் கருப்பு?

சூர்யா, ஆர்.ஜே.பாலாஜியின் ‘கருப்பு’ பட ரிலீஸ் சில காரணங்களுக்காக தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. டிசம்பரிலாவது ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கும் வழியில்லை என்றாகிவிட்டது. காரணம், நவ., இறுதியில் சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்தை இயக்குநர் லிங்குசாமி ரீ ரிலீஸ் செய்கிறார். அதன் பிறகு பொங்கலுக்கு விஜய், சி.கா படங்கள் மோதுகின்றன. எனவே, ஜனவரி இறுதியில் ‘கருப்பு’ ரிலீஸ் ஆகலாம் என்கின்றனர்.
News November 12, 2025
குண்டுவெடிப்புக்கு மூளையாக விளங்கியவர் இவரா?

ஃபரீதாபாத்தில் டாக்டர்களை மூளைச்சலவை செய்து டெல்லி குண்டுவெடிப்பை நடத்தியதாக இமாம் இர்ஃபான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீநகரில் அரசு ஹாஸ்பிடலில் பணிபுரிந்த இவர், பள்ளிவாசலுக்கு செல்வது வழக்கம். அங்கு வந்த மற்ற டாக்டர்களுடன் பழகி, அவர்களுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் கொள்கைகளை கற்பித்து மூளை சலவை செய்திருக்கிறார். இவருடன் தொடர்பில் இருந்தவர்கள்தான் வெடிப்பை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.


